வில்லினை ஒத்த புருவம்
வில்லினை ஒத்த புருவம்
A song about velavan
Song sung by
MSSUBBULAKSHMI
( see previous post)
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா வடிவேலவா
https://youtu.be/xtUEXDOyA9E?si=GgVitePLToSSgQFi
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா வடிவேலவா
அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப் பொடியானது
வேலவா வடிவேலவா
சொல்லினை தேனில் குழைத்துரைப்பாள்
சிறு வள்ளியைக் குறவள்ளியை
கண்டு சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே மலைக்காட்டிலே
கல்லினை ஒத்த வலிய மனம்கொண்ட
பாதகன் சிங்கன் பாதகன்
அவன் கண்ணிறண்டாயிரம் காக்கைக்கிரையிட்ட
வேலவா வடிவேலவா
பல்லினைக்காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியைக் குறவள்ளியை
ஒரு பார்ப்பனக்கோலம் தரித்துக்கரம் தொட்ட
வேலவா வடிவேலவா
வேலவா வடிவேலவா ... வேலவா வடிவேலவா.
வெற்றிவேல் முருகனுக்கு ... அரோஹரா!